undefined

 வைரல் வீடியோ...  போடுங்கம்மா ஓட்டு ...  டிவிஷோவில்  விஜய்க்கு  வாக்கு சேகரித்த பிக்பாஸ் பிரபலம்!  

 
தமிழ் சினிமாவில் இளையதளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய் கடந்த ஆண்டு தவெக பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார்.  2026  சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில்  தற்போது அவருடைய கட்சியில் மாவட்ட செயலாளர்கள் உட்பட நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.   அடுத்த மாதம் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செல்கிறார்.

நடிகர் விஜய் ஏற்கனவே பரந்தூர் சென்று முதல் அரசியல் கள பயணத்தை தொடங்கியிருக்கும்  நிலையில் அடுத்ததாக தமிழ்நாடு முழுவதும் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக்  கூறப்படுகிறது.  தற்போதைய நிலவரப்படி நடிகர் விஜய் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில்  நடிகர்கள் பலரும் அவருடைய கட்சியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் பிக் பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன்  விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்  ஒருவரிடம் வெள்ளை வேட்டி சட்டை கட்டிக்கொண்டு எங்களுடைய கட்சியின் இணைந்து கொள்கிறீர்களா எங்களுடைய கட்சி தமிழக வெற்றி கழகம் எனக் கூறுகிறார். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேரடியாக விஜய் கட்சிக்கு வருமாறு வ்நகைச்சுவையாக அழைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!