ரூ.5 லட்சம் பணத்துக்காக Bigg Boss வீட்டை விட்டு வெளியேறுகிறாரா குமரன்?   புதிய Twist!

 

 

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் எதிர்பாராத திருப்பமாக நடிகர் குமரன் ரூ.5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமான குமரன், பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் போட்டியாளராக பங்கேற்றார். நிகழ்ச்சி தொடங்கி 24 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை இல்லாத வகையில் 4-வது வாரத்திலேயே பணப்பெட்டி டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க்கில் ரூ.5 லட்சம் பணம் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேற விரும்புபவர்கள் கையை உயர்த்தலாம் என பிக்பாஸ் அறிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது குமரன் தனது கையை உயர்த்தியுள்ளார்.

குமரனின் இந்த முடிவு வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக வெளியாகியுள்ள புரோமோ காட்சிகளில் தெரிகிறது. அவரை தொடர்ந்து போட்டியாளர்கள் சமாதானப்படுத்த முயன்றதாகவும், ஆனால் குமரன் தனது முடிவில் உறுதியாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பின்னர் குமரன் ரூ.5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரன் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பதற்கு பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, நிகழ்ச்சியில் தனது தந்தை குறித்து அவர் முன்பு பேசியிருந்த நிலையில், குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக வெளியேற முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவரது முடிவுக்கான முழுமையான காரணத்தை அவர் அதிகாரப்பூர்வமாக விளக்கியுள்ளாரா என்பது நிகழ்ச்சியின் அடுத்தடுத்த எபிசோடுகளில்தான் தெளிவாகும்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களில் பொதுவாக பணப்பெட்டி டாஸ்க் இறுதிக்கட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் நிலையில், சீசன் 10-ல் நான்காவது வாரத்திலேயே இந்த டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த நாட்களில் மேலும் என்னென்ன திருப்பங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.