பிக்பாஸ் சீசன் 10 - 21 போட்டியாளர்களின் உத்தேசப் பட்டியல் வெளியீடு!
பிரபலமான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த உத்தேசப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சினிமா, சின்னத்திரை, மீடியா மற்றும் பொதுமக்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 21 பேர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ஜாய் க்ரிசில்டா (ஸ்டைலிஸ்ட்), பிரியா ராமன் (நடிகை), ஜனனி அசோக் குமார் (சீரியல் நடிகை), டாலி ('குக் வித் கோமாளி' பிரபலம்), முரளி விஜய் (முன்னாள் கிரிக்கெட் வீரர்), ஆர்யன் (சீரியல் நடிகர்), புவி அரசு (சீரியல் நடிகர்), பிரசாந்த் (திரைப்பட விமர்சகர்)
வினோத் பாபு (சீரியல் நடிகர்), நவீன் (சீரியல் நடிகர்), குரேஷி (விஜய் டிவி பிரபலம்), சிந்தியா வினோலின் (நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் மனைவியின் தங்கை), அக்ஷிதா அசோக் (சீரியல் நடிகை), ஃபரினா (சீரியல் நடிகை), ஹேமா ராஜ்குமார் (சீரியல் நடிகை), பானுமதி (சீரியல் நடிகை), ஸ்வப்னா (மேக்கப் ஆர்ட்டிஸ்ட்), காயு ஸ்ரீ (சீரியல் நடிகை), கரிஷ்மா (பொதுப்பிரிவு / காமன் மேன்), முனியம்மா (பொதுப்பிரிவு / காமன் மேன்), ஜேசன் கௌஷிக் (பொதுப்பிரிவு / காமன் மேன்)