பெண்ணின் மரணத்தில் சந்தேகம்… மாமியார் வீட்டு வாசலிலேயே இறுதிச் சடங்கு  செய்த பெற்றோர்... உறைய வைக்கும் வீடியோ!

 

 

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் திருமணமான பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் எடுத்த முடிவு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman’s Body Cremated at In-Laws’ Main Gate, Police Register Named Murder FIR After the suspicious death of 39-year-old married woman Vibha Thakur in #Muzaffarpur, #Bihar, her outraged family from her parents’ home accused her in-laws of murder and performed her last rites right at the main gate of her marital home. - Following the uproar and the incident, police registered a named FIR against a total of 4 people, including the deceased woman’s husband, mother-in-law, father-in-law and sister-in-law, based on a complaint by her family, and launched an in-depth legal investigation into the case...

— Siraj Noorani (@sirajnoorani) November 18, 2026

முசாபர்பூர் மாவட்டம் சதர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகமதுபூர் படாஹி கிராமத்தைச் சேர்ந்த சந்தன் தாக்கூரின் மனைவி விபா தேவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விபா தேவியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பிரேதப் பரிசோதனை முடிந்ததும் விபா தேவியின் உடலை நேரடியாக அவரது புகுந்த வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு வீட்டின் பிரதான நுழைவாயிலிலேயே சிதை அமைத்து, அனைவரும் பார்க்கும் வகையில் இறுதிச் சடங்குகளைச் செய்து உடலைத் தகனம் செய்தனர்.

குடும்பத்தினரின் இந்த முடிவால் கிராமத்தில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபா தேவியின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையின் விசாரணை விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.