கல்யாணம் செய்ய முடியாது ... காதலியை பைக்கில் 100 மீட்டர் இழுத்துச் சென்ற காதலன்... பதைபதைக்கும் வீடியோ1
பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அரசு அளவையராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர் திடீரெனக் காதலியைப் புறக்கணித்து விலகிச் செல்ல முயற்சித்துள்ளார். வேதனையடைந்த இளம்பெண், காதலனை நேரில் சந்தித்துத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.
Love Betrayal: An incident from Rajgir Bihar involving a woman being dragged behind a motorcycle highlights a case of severe personal dispute
— Ramesh Tiwari (@rameshofficial0) July 27, 2026
The confrontation began when a man refused to marry his partner and tried to flee the spot
In a desperate attempt to stop him the woman… pic.twitter.com/c9BveYeqC8
காதலன் தப்பிச் செல்வதைத் தடுக்க எண்ணிய இளம்பெண், வேகமாகச் சென்று இருசக்கர வாகனத்தின் பின்பகுதியைப் பலமாகப் பிடித்துக் கொண்டார். இருப்பினும் சிறிதும் இரக்கமின்றி அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தின் வேகத்தை அதிகரித்து வாகனத்தை இயக்கியுள்ளார். இதில் பிடி தளராத அந்த இளம்பெண் நடுச்சாலையில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்குப் பதைபதைக்கத் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த அந்த இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் இருவருமே கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டு ஆத்திரமடைந்த அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக ஓடிவந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்துத் தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை மீட்டு அங்கே வந்த காவல் துறையினரிடம் பொதுமக்கள் முறைப்படி ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பான நடுநடுங்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.