ஆற்றுக்குள் சரிந்த 100 ஆண்டு பழமையான கோவில்... அதிர்ச்சி வீடியோ!

 

 

 

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில், கங்கை நதியில் ஏற்பட்ட கடுமையான கரை அரிப்பு மற்றும் சீற்றத்தின் காரணமாக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைதி துர்க்கை கோவில் முற்றிலுமாக இடிந்து ஆற்று நீரில் மூழ்கியுள்ளது. கங்கை நதியில் நிலவி வரும் அதிவேக நீர்ரோட்டம் காரணமாகக் கரைகளில் தீவிர மண் அரிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

ஆற்றின் கரையில் அமைந்திருந்த இந்தப் பழமையான இக்கோவிலின் அடிப்பகுதி மண்ணரிப்பால் பலவீனமடைந்து, நொடிப் பொழுதில் கங்கை நதியின் சுழலில் சிக்கிச் சரிந்து விழுந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் சோகமான சூழல் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பல தலைமுறைகளாக உள்ளூர் மக்களால் மிகுந்த பக்தியுடன் வழிபடப்பட்டு வந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில் ஆற்றில் மூழ்கிய சம்பவம் பக்தர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஏற்பட்டு வரும் மண் அரிப்பால் அருகிலுள்ள பிற கட்டடங்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.