வேடந்தாங்கலில் பறவைகள் சீசன் தொடக்கம்... 10000 க்கும் மேற்பட்ட பறவைகள் குவிந்தன!
மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இந்த ஆண்டு பறவைகள் சீசன் துவங்கியுள்ளது. இதனால் ஏரியைச் சுற்றி சுமார் 10,000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து தங்கியுள்ளன. ஆஸ்திரேலியா, சைபீரியா, இலங்கை, பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, பாம்பு தாரா, நீர்காகம், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 21 வகை பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து தங்கியுள்ளன. வடகிழக்கு பருவமழையால் ஏரி 10 அடி வரை நீரால் நிரம்பியுள்ளதால், பறவைகள் கூடு கட்டுவதற்கான பாதுகாப்பான சூழல் உருவாகியுள்ளது.
புதிதாக வந்த நத்தை கொத்தி நாரைகள் ஏரியில் உள்ள செடிகள், கொடிகளை பறித்து கூடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதனால் சரணாலயம் முழுவதும் பறவைகளின் சத்தம் மற்றும் பறப்பால் களைகட்டியுள்ளது. பறவைகள் சீசன் தொடங்கியுள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வரத் தொடங்கியுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் சரணாலய பராமரிப்பு பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5 என நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேடந்தாங்கலுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அனுபவிக்கின்றனர். வார இறுதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சுற்றுச்சூழல் மாசு தடுக்க பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் சரணாலயத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் சோதனைகள் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!