தமிழக அரசியலின் கலாச்சாரமாகவே மாறிய 'பிரியாணி அரசியல்'
தமிழகத் தேர்தல் களத்தில் தொண்டர்களையும் பொதுமக்களையும் பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஈர்ப்பதற்கும், பிரச்சார வேகத்தைத் தக்கவைப்பதற்கும் 'பிரியாணி அரசியல்' ஒரு தவிர்க்க முடியாத கலாச்சாரமாக மாறியுள்ளது.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்குத் தூரத்து ஊர்களிலிருந்து தொண்டர்களையும் பொதுமக்களையும் வரவழைக்க உணவாகப் பிரியாணிப் பொட்டலங்கள் வழங்குவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. சிக்கன், மட்டன் மற்றும் இறால் பிரியாணி போன்றவை தொண்டர்களிடையே மிகவும் பேமஸ் ஆகும்.
பிரியாணி சமைப்பர்களுக்கான கட்டணம், அரிசி, கறி மற்றும் பிரியாணி பொட்டலங்கள் விநியோகத்திற்கான செலவு என லட்சக்கணக்கில் பணப்புழக்கம் நடப்பதால், தேர்தல் ஆணையத்தின் செலவுக் கண்காணிப்பு வரம்பிலும் இது குறித்த விவாதங்கள் எழுகின்றன.
திண்டுக்கல், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பிரியாணி மாஸ்டர்கள் மூலமாகத் தேர்தல் களங்களில் பிரச்சார வாகனங்களுக்கு அருகிலேயே அண்டாக்களில் பிரியாணி சமைத்து உடனுக்குடன் சூடாகக் கொடுக்கும் அளவுக்கு 'பிரியாணி அரசியல்' தமிழகத் தேர்தல் களத்தில் வேரூன்றியுள்ளது.