பட்டப்பகலில் பயங்கரம்.. பாஜக நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்..!

 

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த சக்திவேல் (35), பாஜக ஓபிசி பிரிவு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.மேலும் இவர் அதே பகுதியில் நிதி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் தனது வீட்டில் இருந்து காலை 6 மணியளவில் வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள தனது சொந்த குடோனுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3க்கும் மேற்பட்டோர்   விரட்டிச் சென்றனர்.

சக்திவேல் தப்பியோட முயன்றபோது, ​​மர்மநபர்கள் அவரை துரத்திச் சென்று ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். தப்பியோட முயன்றபோதும் துரத்திச் சென்று கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர்.அவரது உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சரக்கு வாகனம் விற்பனை செய்வது தொடர்பாக சக்திவேலிடம் ஏற்கனவே ஒருவர் பிரச்னையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் டோல்கேட் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் போலீசார் டோல்கேட் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரையில் அதிகாலையில் சாலையில் நடந்து சென்ற பாஜக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சக்திவேல் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை கொன்றது. கொலையில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. வாகன விற்பனையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்