குண்டு கட்டாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. அதிரடி காட்டிய காவல்துறையினர்..!
கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். இதற்கு இரு தரப்பினரும் மாறி மாறி கண்டனங்களை பதிவிட்டு வரும் நிலையில்,நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் தனது டிவிட்டர் பதிவில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பிரவீன் ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் இன்று அதிகாலை பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வக்குமார் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,