தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு ரூ.1,472.8 கோடி நிதி வரவு!
ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களின் போது பாரதிய ஜனதா கட்சிக்குக் கிடைத்த நிதி மற்றும் தேர்தல் களத்தில் செய்யப்பட்ட செலவினங்கள் குறித்த தேர்தல் ஆணையக் கணக்கு விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை ஒட்டி, பாஜக மத்திய தலைமையகத்திற்கு மொத்தம் ரூ.1,472.8 கோடி அளவுக்குக் கட்சி நிதி கிடைத்துள்ளதாகத் தேர்தல் ஆணையக் கணக்குகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிதி வரவின் மூலம் பாஜகவின் ஒட்டுமொத்த இருப்புத் தொகை தற்போது ரூ.7,627.2 கோடியாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக அசாம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் தேர்தல் பிரசாரங்கள் மற்றும் வேட்பாளர்களுக்காக பாஜக தரப்பில் ரூ.160 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் தேர்தல் பணிகளுக்காக மொத்தம் ரூ.51.6 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.