“உதயநிதியின் இரட்டை அர்த்த பேச்சு அருவருப்பானது” - பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி கண்டனம்!

 

தஞ்சாவூரில் நடைபெற்ற மேகதாது அணை எதிர்ப்புப் போராட்ட ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு பாஜக மாநில நிர்வாகி நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய இரட்டை அர்த்த வார்த்தைகள் மிகவும் அருவருப்பானது, ஆபாசமானது மற்றும் வெட்கக்கேடானது எனக் சாடியுள்ளார். "உண்மையிலேயே தாய், மனைவி, மகள் உள்ள ஒரு புறம்போக்குக் கூட இப்படி கேவலமாகப் பேச மாட்டான்; அப்படிப் பேசுபவர்களை எந்தப் பெண்ணும் மன்னிக்க மாட்டார்கள்" எனக் காரசாரமாகப் பதிவிட்டுள்ளார்.

'திராவிட மாடல்' என்று கூறிக் கொண்டு இது போன்ற தரங்கெட்ட பேச்சைப் பொதுவெளியில் பேசுவதை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்க்கண்டேயனைக் கைது செய்ததை விட, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய இந்தத் தரங்கெட்ட பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலினைக் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைப்பதே முதலமைச்சர் விஜய்க்குப் பெருமை சேர்க்கும் எனக் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற ஆபாசப் பேச்சுக்கு நீதிமன்றங்கள் உரிய தண்டனை அளிக்குமா அல்லது பிணை வழங்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் நாராயணன் திருப்பதி தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.