கிருஷ்ண ஜெயந்தி: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

 

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நாட்டு மக்களுக்குத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல அனைவரின் வாழ்விலும் இனிமை நிறைந்திட வேண்டும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணனின் திருவருளால் ஒவ்வொரு இல்லத்திலும் அன்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சி தழைத்தோங்க வேண்டும் என்றும், மக்களின் மனங்களில் நம்பிக்கையும் நல்லெண்ணமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

குழந்தை கிருஷ்ணனின் மழலைக் குறும்பும், பகவத் கீதையின் ஆழ்ந்த ஞானமும் நம் அனைவரையும் எப்போதும் நல்வழியில் வழிநடத்தட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.