'இண்டியா' கூட்டணிக்குப் போட்டியாக நாளை டெல்லியில் பாஜக பேரணி!

 

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, ராகுல் காந்தி தலைமையில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் வரும் நவம்பர் 1-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக பாஜக நாளை பேரணி நடத்தவுள்ளது.

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் இந்த பேரணியைத் தலைமை தாங்கி நடத்துகின்றனர். டெல்லி செங்கோட்டையிலிருந்து தொடங்கும் இந்தப் பேரணி சாந்தினி சவுக் வரை நடைபெறவுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான 'இந்தியா' கூட்டணியின் போராட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லி தலைநகரில் பாஜகவின் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.