திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து - 9 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் இஸ்திரி செய்யப் பயன்படுத்தப்பட்ட சிறிய ரக பாய்லர் எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்துக்குள்ளானது. மதிய உணவு இடைவேளை நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் அனைவரும் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெடிச்சத்தத்தால் அதிர்ச்சியடைந்த 9 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தனர்.
உணவு இடைவேளை நேரம் என்பதால் அங்கு ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது; இதனால் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
விபத்தில் அதிர்ச்சியடைந்து மயக்கமடைந்த பெண் தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்ச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.