‘காண்டே’, ‘காபில்’ பட இயக்குனர் சஞ்சய் குப்தா காலமானார்!

 

 

பாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான சஞ்சய் குப்தா (57) காலமானார். மும்பையில் உள்ள தனது வீட்டில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 30-ம் தேதி இரவு வீட்டின் குளியலறையில் தவறி விழுந்ததில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் உயிரிழந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவை திரைப்பட இயக்குனர் அசோக் பண்டிட் சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘காண்டே’, ‘முசாஃபிர்’, ‘ஷூட்அவுட் அட் லோகண்ட்வாலா’, ‘ஜஸ்பா’, ‘காபில்’, ‘ஷூட்அவுட் அட் வடலா’ உள்ளிட்ட படங்கள் மூலம் சஞ்சய் குப்தா ரசிகர்களிடையே பிரபலமானார். ஆக்‌ஷன் மற்றும் கிரைம் கதைக்களம் கொண்ட திரைப்படங்களை இயக்கியதுடன், பல படங்களையும் தயாரித்துள்ளார்.மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தி திரையுலகில் பணியாற்றிய அவரது மறைவு, பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.