எதிரிகளை 100 டிகிரி வெப்பத்தில் பொசுக்கும் விசித்திரமான 'பாம்பார்டியர் வண்டு'!
இயற்கையின் விசித்திரப் படைப்புகளில் ஒன்றான 'பாம்பார்டியர் வண்டு', தனக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் தற்காத்துக் கொள்ளத் தனது உடலையே ஒரு ரசாயனக் ஆயுதமாகப் பயன்படுத்தி வியக்க வைக்கிறது.
இந்த வண்டின் வயிற்றுப் பகுதியில் பிரத்யேகமான இரண்டு அறைகள் உள்ளன. அதில் உள்ள வேதிப்பொருட்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் அது விவரிக்க முடியாத அளவுக்கு வெப்பத்தை உருவாக்குகிறது.
எதிரிகள் தாக்க வரும்போது, 100 டிகிரி செல்சியஸ் கொதிநிலை கொண்ட கொந்தளிப்பான நச்சுப் புகையைத் தன் எதிரிகள் மீது பீய்ச்சி அடித்து அவற்றை நிலைகுலையச் செய்கிறது.
ஒரு வினாடிக்கு சுமார் 500 முறை வரை தொடர்ச்சியாக வெடிக்கும் திறன் கொண்ட இந்த வண்டின் தனித்துவமான பாதுகாப்பு நுட்பமும், அதன் வியக்கத்தக்க உடலமைப்பும் விஞ்ஞானிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன.