பத்திரம் மக்களே... 14 இடங்களில் சதமடித்த வெயில் - வேலூரில் 106 டிகிரி - நிறைய தண்ணீர் குடிங்க!
தமிழகத்தில் கோடைக் காலம் தன் விஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தின் 14 முக்கிய நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகி, மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக வேலூரில் 105.8 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
சென்னையில் மீனம்பாக்கம் பகுதியில் 100.22 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 98 டிகிரிக்கும் அதிகமாகவும் வெயில் பதிவாகியுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகளின் வசதிக்காகச் சென்னை மாநகராட்சி சார்பில் முக்கிய சிக்னல்களில் நிழல் தரும் வகையில் 'பசுமை வலைகள்' கட்டப்பட்டுள்ளன.
அனல் காற்று வீசினாலும், மக்களுக்குச் சிறு ஆறுதல் தரும் செய்தியை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று (ஏப்ரல் 20) முதல் ஏப்ரல் 23 வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்) மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று பதிவான உச்சக்கட்ட வெப்பநிலைகள்:
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
அதே சமயம், உள் மாவட்டங்களில் வெப்பநிலையானது இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே இருக்கும் என்பதால், மதியம் 12 மணி முதல் 4 மணி வரை மக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.