பத்திரம் மக்களே... தமிழகத்தின் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
இன்று சென்னை உட்பட தமிழகத்தின் மொத்தம் 16 மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தற்போதைய அறிவிப்பின்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பருவமழை தாமதமாகத் தொடங்கினாலும், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சில முக்கிய மாற்றங்கள் காரணமாக இந்த மழைப்பொழிவு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இந்த 16 மாவட்டங்களின் ஒருசில இடங்களில் பலத்த காற்றும், மற்ற பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்" என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.