பத்திரம் மக்களே... தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று மாநிலத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் சூழலில், வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி மற்றும் இதர வானிலை மாற்றங்கள் காரணமாகப் பல மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து வருகிறது.

இன்று தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.