undefined

 30 ஆண்டுகள் அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு போனஸ் மற்றும் ஊதிய உயர்வு… தமிழக அரசு அரசாணை !  

 
தமிழ்நாடு அரசு  30 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரியும்  அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட விளக்கத்தில் அரசுப் பணியாளர்களுக்கு  1998ம் ஆண்டு வெளியான அரசாணை எண் 216, 2009ம் ஆண்டு வெளியான அரசாணை 234 மற்றும் 2017ம் ஆண்டு வெளியான 303 அரசாணை இவைகளின்  அடிப்படையில், பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தின் 3% அளவில் போனஸ் உயர்வு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய திருத்திய ஊதியக் கட்டமைப்பிலும் தொடரும் என நிதித்துறை தெரிவித்துள்ளது. 

 
ஆனால், 2000ம் ஆண்டு வெளியான நிதித்துறை கடிதம் எண் 35681-ன் படி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வுகளைத் தவிர்த்து ஒரே பதவியில் தேக்கமடைந்த பணியாளர்கள், போனஸ் உயர்வுக்கு தகுதியில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2020 மற்றும் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதியன்று நடைபெற்ற கணக்குத்தணிக்கையின் அடிப்படையில், அலுவலக உதவியாளர் மற்றும் கணக்குத் தணிக்கைத் துறையில் 30 ஆண்டு சேவை முடித்தவர்களுக்கு போனஸ் உயர்வு வழங்கும் முன்மொழிவுகள் மீது ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் , தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கில், அலுவலக உதவியாளர் பதவியிலிருந்து பதிவு எழுத்தர் பதவிக்கு நேரடி பதவி உயர்வு வாய்ப்பு இல்லை. அத்தகைய  பணியாளர்களுக்கு ஒரு போனஸ் உயர்வு வழங்கக்கூடிய தகுதி இருப்பதாக தீர்ப்பாயம் கூறியுள்ளது. அதாவது, பதவி உயர்வு வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு, இந்தத் துறையின் பணியாளர்கள் நிதித்துறையின் 2000ம் ஆண்டு கடிதத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். எனவே, அலுவலக உதவியாளர் பதவியில் நீண்டகால சேவையை முடித்தவர்களுக்கும், ஒரு போனஸ் உயர்வு வழங்கும் தீர்மானம் அமைய வாய்ப்பு இருப்பதாகவும் நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!