இன்று காலை தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தொடக்கம்... திருநெல்வேலி வரை இயக்கம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னை தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே அதிநவீன ஏசி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரத்திலிருந்து இன்று நவம்பர் 5ம் தேதி இரவு 7:30 மணிக்கு புறப்படும் இந்தச் சிறப்பு ரயில், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மறுநாள் காலை 9:20 மணிக்குத் திருநெல்வேலிச் சென்றடையும்.
மறுமார்க்கமாக வரும் நவம்பர் 9-ஆம் தேதி இரவு 7:00 மணிக்குத் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 9 மணிக்குச் சென்னை தாம்பரம் வந்தடையும்.
முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் கூடிய இந்தச் சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
பண்டிகைக் காலத்தில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் தங்களின் பயணத்தை விரைவாகத் திட்டமிட்டு, ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அல்லது ரயில்வே பயணச்சீட்டு மையங்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.