இன்று முன்பதிவு தொடக்கம்... தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - மிஸ் பண்ணாதீங்க!

 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் தென் மாவட்டப் பயணிகளின் வசதிக்காகச் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி மற்றும் தாம்பரம் - தென்காசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி ஒருவழி சிறப்பு ரயில் (06151). புறப்படும் நாள் நவம்பர் 5 (வியாழக்கிழமை) இரவு 11:50 மணிக்குச் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். மறுநாள் (நவம்பர் 6) பிற்பகல் 3:15 மணிக்குக் கன்னியாகுமரியைச் சென்றடையும்.

கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் ஒருவழி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06152): புறப்படும் நாள்: நவம்பர் 9 (திங்கட்கிழமை) இரவு 11:20 மணிக்குக் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும். மறுநாள் (நவம்பர் 10) நண்பகல் 12:00 மணிக்குச் சென்னை எழும்பூரை வந்தடையும்.

தாம்பரம் - தென்காசி சிறப்பு ரயில் (06049): புறப்படும் நாள்: நவம்பர் 7 (சனிக்கிழமை) காலை 5:00 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்படும். அதே நாள் மாலை 4:45 மணிக்குத் தென்காசியைச் சென்றடையும்.

செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு ரயில் (06050): புறப்படும் நாள்: நவம்பர் 9 (திங்கட்கிழமை) மாலை 3:00 மணிக்குச் செங்கோட்டையில் இருந்து புறப்படும். மறுநாள் (நவம்பர் 10) அதிகாலை 3:20 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும்.

இந்தச் சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் வழக்கமான ரயில்களில் பயணச்சீட்டு கிடைக்காமல் அவதிப்படும் தென் மாவட்ட மக்களுக்கு இந்தச் சிறப்பு ரயில்களின் அறிவிப்பு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.