இன்று முன்பதிவு துவக்கம்... தமிழ் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - முழு அட்டவணை இதோ!

 

ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், வார இறுதி நாட்களுடன் வரும் இந்தப் பண்டிகை கால நெரிசலைத் தவிர்க்கத் தென்னக ரயில்வே முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

1. சென்னை - திருநெல்வேலி வழித்தடம்:

திருநெல்வேலி - சென்னை எழும்பூர்: ஏப்ரல் 9-ம் தேதி இரவு 11:40 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10:45 மணிக்குச் சென்னை சென்றடையும்.

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி: ஏப்ரல் 10-ம் தேதி மதியம் 12:30 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு, அன்றைய தினமே இரவு திருநெல்வேலியை அடையும்.

2. சென்னை - கொல்லம் / திருவனந்தபுரம் வழித்தடம்:

சென்னை சென்ட்ரல் - கொல்லம்: ஏப்ரல் 15-ம் தேதி மதியம் 3:10 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6:55 மணிக்குக் கொல்லம் சென்றடையும்.

கொல்லம் - சென்னை சென்ட்ரல்: ஏப்ரல் 16-ம் தேதி கொல்லத்திலிருந்து சென்னைக்குத் திரும்பும் ரயில் இயக்கப்படும்.

சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு: ஏப்ரல் 10-ம் தேதி இரவு 11:55 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 6:00 மணிக்குச் சென்றடையும்.

திருவனந்தபுரம் வடக்கு - சென்னை எழும்பூர்: ஏப்ரல் 15-ம் தேதி மறுமார்க்கத்தில் இயக்கப்படும்.

3. சென்னை - தூத்துக்குடி வழித்தடம்:

சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி: ஏப்ரல் 13-ம் தேதி இரவு 11:50 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:15 மணிக்குத் தூத்துக்குடி சென்றடையும்.

தூத்துக்குடி - சென்னை எழும்பூர்: ஏப்ரல் 14-ம் தேதி மதியம் தூத்துக்குடியிலிருந்து புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 3:30 மணிக்குச் சென்னை வரும்.

முன்பதிவு விபரங்கள்:

திருநெல்வேலி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. கொல்லம், தூத்துக்குடி மற்றும் இதர சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று ஏப்ரல் 8ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கியது. IRCTC இணையதளம் மற்றும் ரயில்வே முன்பதிவு மையங்கள் மூலம் பயணிகள் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். இந்தச் சிறப்பு ரயில்கள் மதுரை, திருச்சி, விழுப்புரம், சேலம் மற்றும் ஈரோடு வழியாக இயக்கப்படுவதால், இடைப்பட்ட நிலையங்களில் உள்ள பயணிகளுக்கும் இது பெரும் பயனுள்ளதாக அமையும்.