மார்ச் 22 முதல்  பாஸ் என்கிற பாஸ்கரன் மீண்டும் திரையரங்குகளில்... ரசிகர்கள் கொண்டாட்டம்!

 

சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று, பிரம்மாண்ட வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து, இயக்குநர் ராஜேஷ்.M இயக்கத்தில் வெளியான, மற்றொரு வெற்றிப்படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படமும், ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

வருகின்ற மார்ச் 22ம் தேதி, இந்த படத்தை அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம் தமிகழகம் முழுவதும் வெளியிடுகிறது. ‘சிவா மனசுல சக்தி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனது இயக்கத்தில் வெளியான, மற்றொரு வெற்றிப்படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ ரி ரிலீஸ் செய்யப்படுவதில் இயக்குநர் ராஜேஷ்.M பெரும் உற்சாகத்தில் உள்ளார்.

இயக்குநர் ராஜேஷ்.M இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான ரொமான்ஸ் காமெடி ஜானரில் வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ வெளியானபோதே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் சூப்பர் ஹிட் பாடல்களுடன் வெளிவந்த இப்படத்தின் மொத்தப்பாடல்களும் இன்றளவும் ரசிப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் ஆர்யா திரைவாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றித்திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பல வெற்றிப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று வரும் நிலையில், இப்படத்தின் ரீ ரிலீஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்