undefined

 தெருநாய் தாக்கி சிறுமி, சிறுவன் காயம்... சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பு!

 

அம்பத்தூரில் 8 வயது சிறுமியும், 6 வயது சிறுவனும் தெருநாயால் கடிக்கப்பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரகடம் கோவிந்தராஜ் தெருவைச் சேர்ந்த சரவணன் பிரசாதின் மகள் தன்மதி (8) மற்றும் புவனேஸ்வரியின் மகன் கவிஷ் (6) ஆகியோர் நேற்று வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, திடீரென ஒரு தெருநாய் அவர்களை விரட்டியது. பயந்து ஓடிய தன்மதியை நாய் துரத்தி கடித்து குதறியது. அதே நேரத்தில் கவிஷையும் நாய் தாக்கியது.

இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து நாயை அடித்து விரட்டி, குழந்தைகளை ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தன்மதியின் கை, காலில் மற்றும் கவிஷின் தொடை, கையில் ஆழமான காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது இருவரும் சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்மதியின் தந்தை சரவணன் பிரசாத் மற்றும் கவிஷின் தாய் புவனேஸ்வரி, “எங்கள் பகுதியில் தெருநாய்கள் அதிகம் சுற்றி வருகின்றன. குழந்தைகளின் உயிர் பாதுகாப்புக்காக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!