திருப்பதியில் பிரம்மோற்சவ விழா - வண்ண மலர்கள், மின்விளக்குகளால் பிரம்மாண்ட அலங்காரம் - இன்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கொடியேற்றி வைக்கிறார்!

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உலகப் புகழ்பெற்ற 9 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (செப்.15) கோலாகலமாகத் தொடங்குகிறது.

இன்று தொடங்கும் பிரம்மோற்சவ விழாவில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் கலந்து கொண்டு, மாநில அரசு சார்பில் சுவாமிக்குச் பட்டு வஸ்திரங்களைச் சமர்ப்பிக்க உள்ளார்.

விழாவின் ஒரு பகுதியாக, பக்தர்களின் வசதிக்காக மின்சாரப் பேருந்துகள் மற்றும் 'நந்தகம்' செயலி உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

விழாவையொட்டி திருமலை முழுவதும் பல்வேறு நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட அரிய மலர்களாலும், பல வண்ண மின்விளக்குகளாலும் தேவலோம் போல மிகப்பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.