தடைகளைத் தகர்த்து முன்னேறுவீங்க... திருமணம் கைகூடும்.. இன்றைய ராசிபலன்!

 

மேஷம்: இன்று உங்களுக்குச் செயல்களில் வேகம் கூடும். தடைபட்ட காரியங்கள் நண்பர்களின் உதவியால் வெற்றிகரமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் சிறு அக்கறை தேவை.

ரிஷபம்: குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். சுபச் செய்திகள் தேடி வரும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

மிதுனம்: புத்திசாலித்தனத்தால் இக்கட்டான சூழல்களைச் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பழைய கடன்கள் வசூலாகும். தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

கடகம்: மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும்.

சிம்மம்: இன்று எதிலும் நிதானம் தேவை. வரவை விடச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெளியூர் பயணங்களின் போது உடைமைகளில் கவனம் தேவை. பொறுமையைக் கடைப்பிடித்தால் சங்கடங்களைத் தவிர்க்கலாம்.

கன்னி: உங்களுக்கு இன்று யோகமான நாள். சந்திராஷ்டமம் விலகி உற்சாகம் பிறக்கும். பிரிந்திருந்த உறவினர்கள் மீண்டும் இணைவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

துலாம்: தொழில் நிமித்தமான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.

விருச்சிகம்: இன்று உங்களுக்குத் திடீர் பணவரவு உண்டு. ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சொத்து விவகாரங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும்.

தனுசு: கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் இன்று கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி வந்து சேரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

மகரம்: தடைகளைத் தகர்த்து முன்னேறுவீர்கள். பிள்ளைகளின் கல்வி மற்றும் முன்னேற்றம் குறித்து நல்ல செய்திகள் வரும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்: வேலைப்பளு காரணமாகச் சற்று சோர்வாகக் காணப்படுவீர்கள். அறிமுகம் இல்லாத நபர்களுக்குப் பண விஷயத்தில் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.

மீனம்: அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையும். தடைபட்டிருந்த திருமணப் பேச்சுகள் மீண்டும் தொடங்கிச் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள்.