BREAKING: 2027 ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தள்ளிவைப்பு!
சவுதி அரேபியாவில் நடைபெறவிருந்த 19-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி, பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக 2027 டிசம்பர் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பழைய தேதி 2027 ஜனவரி 7 முதல் பிப்ரவரி 5 வரை நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது 2027 டிசம்பர் 23 முதல் 2028 ஜனவரி 21 வரை போட்டிகள் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகப் போட்டியைத் தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட முக்கிய உறுப்பு கூட்டமைப்புகளின் கோரிக்கையை ஏற்று AFC இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத், ஜெத்தா மற்றும் அல் கோபார் ஆகிய நகரங்களில் 24 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகள் நடைபெறும்.