#BREAKING: இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!

 

இந்தோனேசியாவின் கிழக்கு நசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரெஸ் தீவின் வடக்கே இன்று ஆகஸ்ட் 15 அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

எண்டே நகருக்கு வடமேற்கே 68 கி.மீ. தொலைவில் கடல் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.1, 5.9 எனப் பல தொடர் நில அதிர்வுகள் பதிவாகின. இச்சம்பவத்தில் சிக்கா மாவட்டத்தில் உள்ள எல் சே துறைமுகப் பகுதியில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.

மவுமேரே மற்றும் ருடெங் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் துறைமுகக் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. அதிர்ச்சியடைந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் கடல் நீர் பின்வாங்கியதால், உடனடி முன்னெச்சரிக்கையாகப் புளோரெஸ் கடலோர மக்களுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.