#BREAKING: "போலீசார் கொடூரமா அடிச்சாங்க" - உயிரிழந்த அருணாச்சலத்தின் வாக்குமூல வீடியோ வெளியாகி பரபரப்பு!

 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர் அருணாச்சலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பேசிய வாக்குமூல வீடியோ வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த அருணாச்சலம் (26) தென்பாகம் காவல் நிலைய விசாரணையின் போது பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனைப் படுக்கையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அருணாச்சலம் பேசிய வீடியோ பதிவில், "காவல்துறையினர் தன்னைத் தலையிலும் காலிலும் மிகக் கொடூரமாகத் தாக்கினார்கள்" எனத் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/BFTCZamwBlM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/BFTCZamwBlM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

தற்போது இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வரும் இந்த வீடியோ, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலத்தின் மரணத்திற்குப் காவல்துறையினரின் இந்த அத்துமீறிய தாக்குதலே முழுக் காரணம் என்பது வீடியோ மூலம் உறுதியாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வாக்குமூல வீடியோ வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் உறவினர்கள் நடத்தி வரும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

உரிய நீதி கிடைக்கும் வரை அருணாச்சலத்தின் உடலைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதில் உறவினர்கள் உறுதியாக உள்ளனர்.