BREAKING: ‘அர்னாப்’ புயல் உருவானது.. .தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று அக்டோபர் 26 காலை 5.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது.
வங்கதேசம் பரிந்துரைத்த 'அர்னாப்' (அர்த்தம்: பெருங்கடல்) என்ற பெயரைக் கொண்டுள்ள இப்புயலானது, மேற்கு - வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து படிப்படியாகத் தீவிர மற்றும் மிக தீவிரப் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இப்புயல் குறித்துப் தனியார் வானிலை ஆய்வாளர் (டெல்டா வெதர்மேன்) ஹேமச்சந்தர் அளித்துள்ள விளக்கத்தில், 'அர்னாப்' புயலால் தமிழ்நாட்டிற்கு எவ்வித நேரடிப் பாதிப்பும் இருக்காது. இருப்பினும், பருவமழைக் காற்று மற்றும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புயல் கரையைக் கடக்கும் திசை மற்றும் மழையின் அளவைக் கண்காணித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.