#BREAKING: விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செயல்பட்டுவரும் தனியார் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாகப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுகள் தொடர்ச்சியாக வெடித்துச் சிதறியதில், ஆலையின் ஒரு பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்து வருகிறது.
விபத்து குறித்துத் தகவலறிந்ததும் உடனடியாகத் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். தற்போது தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் ஏற்பட்ட பொருள் சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்த முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.