#BREAKING: பத்ரிநாத் அருகே 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்.. தேடுதல் வேட்டை தீவிரம்!

 

உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத்திலிருந்து ஃபாட்டா நோக்கிப் பயணித்த தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, சமோலி மாவட்டம் ஜோஷிமத் அருகே திடீரென மாயமாகி விபத்துக்குள்ளானதாக அஞ்சப்படுகிறது.

'ட்ரான்ஸ் பாரத் ஏவியேஷன்' நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டரில் ஒரு விமானி மற்றும் 5 ஆன்மீக பக்தர்கள் என மொத்தம் 6 பேர் பயணித்துள்ளனர். பத்ரிநாத் கோயிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு ஃபாட்டா (Fata) பகுதியை நோக்கிச் சென்றபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/WRSfQr4IJK4?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/WRSfQr4IJK4/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

ஜோஷிமத் அருகே உள்ள சாயென் கிராமத்தின் எல்லைப் பகுதிக்குட்பட்ட காட்டுப் பகுதியில் திடீரென அடர்ந்த புகை மூட்டம் எழுவதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள், உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது.

தகவல் கிடைத்தவுடன் சமோலி மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அடர்ந்த மேகமூட்டம் காரணமாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைவதிலும் வான்வழித் தேடுதலிலும் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலப்பரப்பு வழியிலான தேடுதலுடன் சேர்த்து, மற்றொரு ஹெலிகாப்டர் மூலமாக வான்வழியாகவும் தேடுதல் வேட்டை முடுக்கப்பட்டுள்ளதாகச் சமோலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரின் தற்போதைய நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.