#BREAKING: “போனால் போகட்டும் போடா...” - தவெகவில் இருந்து வெளியேறுகிறாரா நாஞ்சில் சம்பத் - தொண்டர்களிடையே பரபரப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளராகப் பணியாற்றி வரும் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள சூசகமான எக்ஸ் தளப் பதிவு, அவர் கட்சியில் இருந்து விலகப் போவதாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
திமுக, மதிமுக, அதிமுக, அமமுக எனப் பல்வேறு கட்சிகளில் பயணித்த நாஞ்சில் சம்பத், கடந்த 2025 டிசம்பரில் நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். தற்போது அக்கட்சியின் பரப்புரைச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது, என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது" என்று குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.
நாஞ்சில் சம்பத்தின் இந்தத் தத்துவார்த்தமான மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அவர் தவெகவிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளாரோ என்ற விவாதத்தையும் அரசியல் அரங்கில் கிளப்பியுள்ளது.