#BREAKING: பழனி கோயில் நில மோசடி.. கைதான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்ததாகச் குற்றச்சாட்டு எழுந்தது. இவழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை நேற்று கைது செய்தனர்.
இந்த நில மோசடி தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சார்பதிவாளரின் கைது வழக்கில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நிலையில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்குத் திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.