#BREAKING: பண்ருட்டி நகர பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!

 

பண்ருட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) நிர்வாகிகள் அனைவரும் தங்கள் பதவிகளையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர். மோகன், பண்ருட்டி நகரத் தலைவர் வி. அஞ்சுகம் ஆகியோர் தலைமையில் இந்த ஒட்டுமொத்த ராஜினாமா முடிவை நிர்வாகிகள் எடுத்துள்ளனர்.

பதவிகளில் இருந்து விலகிய அனைவரும், அண்ணாமலை அண்மையில் தொடங்கியுள்ள 'We the Leaders' (வீ தி லீடர்ஸ்) என்ற புதிய இயக்கத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 18,00,952 பேர் அதில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.