#BREAKING: மெஜாரிட்டியை தட்டித் தூக்கிய விஜய் - திருமாவளவனிடம் ஆதரவு கடிதம் பெற புறப்பட்டார் ஆதவ் அர்ஜுனா!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 'மேஜிக் எண்' 118-ஐ எட்டுவதில் நீடித்த சஸ்பென்ஸ் இன்றுடன் முடிவுக்கு வந்தது. விசிக-வின் ஆதரவுடன் தவெக தனது பெரும்பான்மையை அதிகாரப்பூர்வமாக எட்டியுள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், விசிக தலைவர் திருமாவளவனைத் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து ஆதரவு கடிதம் பெற புறப்பட்டார். 

இந்தச் சந்திப்பின் முடிவில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க விசிக-வின் 2 எம்.எல்.ஏ-க்களும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை ஆதவ் அர்ஜுனா பெற்று, ஆளுநரிடம் தவெக தங்களது மெஜாரிட்டிக்கான கடிதத்தைத் தரும்.  முன்னதாகக் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு கடிதங்களை வழங்கியிருந்த நிலையில், விசிக-வின் இந்தக் கடிதமே விஜய்யின் முதலமைச்சர் கனவை நனவாக்கியுள்ளது.

விசிக-வின் 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு சேர்ந்ததன் மூலம், தவெக தலைமையிலான கூட்டணியின் பலம் தற்போது துல்லியமாக 118-ஐ எட்டியுள்ளது. தவெக (108) + காங்கிரஸ் (5) + சிபிஐ (1) + சிபிஎம் (2) + விசிக (2) = 118 எம்.எல்.ஏ-க்கள் என மெஜாரிட்டியை எட்டியுள்ளது. பெரும்பான்மைக்கு ஒரு இடம் கூடக் குறைவாக இல்லை என்பதால், விஜய் ஆட்சி அமைக்க இருந்த அனைத்து அரசியல் முட்டுக்கட்டைகளும் தற்போது நீங்கியுள்ளன.

பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டதால், இன்று மாலை அல்லது நாளை காலை ஆளுநரைச் சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 ஆண்டுகாலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்க விஜய் தயாராகிவிட்டார். இதனால் தவெக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.