லஞ்ச வழக்கில் இடைத்தரகர் வீட்டில் 7 கிலோ தங்கம் மற்றும் ரொக்கம் பறிமுதல்!
Sep 5, 2026, 17:50 IST
சேலத்தில் லஞ்ச வழக்கில் கைதான இடைத்தரகர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 7 கிலோ தங்கம் மற்றும் 27 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதிச் சான்றிதழ் பெறுவதற்காகக் குவாரி உரிமையாளர் பிரதாப்பிடம் லஞ்சம் கேட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் புருஷோத்தமன் மற்றும் அவருக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்சப் பணத்தில் ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்கியதாகவும், பிரமாண்டமான பங்களா கட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்துத் தீவிர விசாரணை நடந்து வருகிறது.