undefined

கழிவுநீரை எரிபொருள் ஆக்கலாம்.. கடல்நீரை குடிநீராக்கலாம்.. அசத்தும் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு..!!

 

அசுத்தமான நீர் அல்லது கடல்நீரை சுத்தமான ஹைரட்ரஜன் எரிபொருளாகவும், சுத்திகரிக்கப்பட்ட நீராகவும் மாற்றக்கூடிய புதிய சாதனத்தை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். சூரிய சக்தியால் இயங்கும் இந்த சாதனம், மிதக்கும் செயற்கை இலை என அழைக்கப்படுகிறது.

தாவரங்கள் சூரிய ஒளியை உணவாக மாற்றும் ஒளிச்சேர்க்கையின் அடிப்படையில் இந்த சாதனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த எளிய சாதனம், அடிப்படை வளங்கள் இல்லாத பகுதிகள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். மேலும், சுத்தமான எரிபொருள் மற்றும் நீர் கிடைப்பதற்கான தீர்வுகளுக்கு இது ஒரு உதாரணமாக அமையும் என்றும் கூறுகின்றனர்.

இதற்கு முன்பு கண்டுபிடித்த செயற்கை இலை சாதனத்திற்கு சுத்தமான நீர் ஆதாரங்கள் தேவை. இப்போது கண்டுபிடித்துள்ள புதிய சாதனத்தை அசுத்தமான தண்ணிரில் பயன்படுத்தலாம். அத்துடன், அந்த தண்ணீரை சுத்திகரித்து சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்ய முடியும். எனவே, ஒரே நேரத்தில் இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த சாதனம் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.