சொந்தத் தங்கையை மிரட்டி பலாத்காரம் செய்த அண்ணன்... கேமரா ஆதாரத்துடன் புகார்!
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் படிப்பிற்காக வாடகை அறையில் தங்கியிருந்த இளம்பெண் ஒருவரை, அவரது சொந்தச் சகோதரனே மிரட்டிப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரத்துடன் பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில், சகோதரனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பரேலியில் கல்விக்காக வாடகை அறையில் தங்கியிருந்த இளம்பெண்ணிடம், அவரது சகோதரன் தகாத முறையில் நடந்து கொண்டு, "கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்து கொள்வேன்" என மிரட்டிப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அந்த இளம்பெண் மறைமுகக் கேமராவில் பதிவு செய்து ஆதாரமாகச் சேகரித்துள்ளார்.
இதற்கிடையே குடும்பத்தினர் இளம்பெண்ணின் படிப்பை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் உதவியுடன் அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் சமர்ப்பித்த வீடியோ ஆதாரம் மற்றும் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட சகோதரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.