BSNL அதிரடி சலுகை... வெறும் 1 ரூபாய்க்கு சிம் கார்டு, டேட்டா மற்றும் இலவச அழைப்புகள்!

 

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் போட்டியாகப் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் 'ஃப்ரீடம் 2.0' என்ற அதிரடிச் சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக பிஎஸ்என்எல் இணைப்பைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை வழங்கும் நோக்கில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புச் சலுகை ஏற்கனவே பிஎஸ்என்எல் சிம் கார்டு பயன்படுத்தி வருபவர்களுக்குப் பொருந்தாது; புதிதாக பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்குபவர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.

விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களுடன் அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களை அணுகி, நவம்பர் 11 முதல் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் இந்தச் சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெறும் ₹1 மட்டும் (இலவச சிம் கார்டு), அழைப்புகள், நாடு முழுவதும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற இலவச அழைப்புகள், இணைய வசதி 
நாள்தோறும் 1 ஜிபி அதிவேக டேட்டா போன்றவை வழங்கப்படுகின்றன. இந்த சலுகை காலம் நவம்பர் 11 முதல் பிப்ரவரி 8 வரை மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது.