சுதந்திர தினத்தில் ரூ.1க்கு BSNL-ன் 'Freedom 2.0' ஆஃபர் - புதிய சிம் கார்டு மற்றும் சலுகைகள்!
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அரசு பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 'Freedom 2.0' என்ற சிறப்புச் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இச்சலுகையின் மூலம் புதிய பிஎஸ்என்எல் இணைப்பைப் பெறும் வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1 கட்டணத்தில் சிம் கார்டைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ரூ.1 சலுகையில் 24 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள், தினமும் 1 GB அதிவேக 4G டேட்டா மற்றும் தினமும் 100 SMS வசதிகள் வழங்கப்படுகின்றன.
இச்சலுகை புதிதாக பிஎஸ்என்எல் இணைப்பைப் பெறும் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். பழைய வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ்களுக்குப் பொருந்தாது. இந்த சிறப்புச் சலுகை ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 12 வரையிலான ஒரு மாத காலத்திற்கு அமலில் இருக்கும்.
விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடம் சென்று உரிய e-KYC நடைமுறைகளை முடித்து புதிய சிம் கார்டைப் பெறலாம்.
அமைந்து வரும் 4G நெட்வொர்க் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, தனது வாடிக்கையாளர் தளத்தை அதிகரிக்கும் நோக்கில் பிஎஸ்என்எல் இந்த அதிரடி ஆஃபரை வெளியிட்டுள்ளது.