பட்ஜெட் : தமிழகத்திற்கு 'ரேர் எர்த்' காரிடார் - விவசாய துறைக்கு ₹1.52 லட்சம் கோடி!
இன்று (பிப்ரவரி 1, 2026) காலை 11 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வரும் மத்திய பட்ஜெட் 2026-27 தாக்கலில், இதுவரை வெளியாகியுள்ள சுவாரசியமான அறிவிப்புகள் வரவேற்பைப் பெற்றுள்ளது.
1.தமிழகத்திற்கு 'ரேர் எர்த்' (Rare Earth) காரிடார்
தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் விதமாக, செமிகண்டக்டர் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பிற்குத் தேவையான கனிமங்களை எளிதாகப் பெற தமிழ்நாட்டில் 'ரேர் எர்த் காரிடார்' அமைக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இது மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
2.நடுத்தர வர்க்கத்தினருக்கான வருமான வரி மாற்றம்
புதிய வருமான வரி முறையின் (New Tax Regime) கீழ் வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன: புதிய வரி முறையைப் பின்பற்றுபவர்களுக்கு ₹12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிலையான கழிவு (Standard Deduction) ₹75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், சம்பளம் பெறுவோர் ₹12.75 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை.
3. விவசாயத் துறைக்கு ₹1.52 லட்சம் கோடி
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்தவும் ₹1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் விவசாயம்: 6 கோடி விவசாயிகளின் நில விபரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
இயற்கை விவசாயம்: அடுத்த 2 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற்றப்படுவார்கள்.
4. ரயில்வே மற்றும் உள்கட்டமைப்பு
கவாச் (Kavach) 4.0: ரயில் விபத்துகளைத் தவிர்க்கும் 'கவாச்' பாதுகாப்பு அமைப்பு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
வந்தே பாரத் ஸ்லீப்பர்: நீண்ட தூரப் பயணங்களுக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் மற்றும் சாதாரண மக்களுக்காக 'அமிர்த பாரத்' ரயில்கள் அதிக எண்ணிக்கையில் அறிமுகப்படுத்தப்படும்.
5. புதிய 'சிட்டி எகனாமிக் ரீஜியன்ஸ்'
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களை 'பொருளாதார மண்டலங்களாக' மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது Tier-2 மற்றும் Tier-3 நகரங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும்.
6. ஸ்டார்ட்அப் மற்றும் தொழில்முனைவோர்
₹2 கோடி கடன்: பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த 5 லட்சம் புதிய தொழில்முனைவோருக்கு ₹2 கோடி வரை பிணையில்லா கடன் வழங்கத் திட்டம். முத்ரா கடன், ஹோம்ஸ்டே போன்ற சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கு முத்ரா கடன் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
7. இதர முக்கிய அறிவிப்புகள்
தங்கம் மற்றும் வெள்ளி: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. பயோ-பார்மா (Bio-Pharma) உற்பத்திக்கு வரிச் சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.