அக்டோபர் 12ம் தேதி மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடக்கம் !
2027-28-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அக்டோபர் 12-ந்தேதி தொடங்குகின்றன. இதுதொடர்பாக நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பட்ஜெட் பிரிவு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. செலவினத்துறை செயலாளர் வி.வுவல்னம் தலைமையில் அமைச்சகங்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் தொடங்குகின்றன.
இக்கூட்டங்களில் துறைகளின் நிதி தேவை மற்றும் புதிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். அமைச்சகங்கள் தேவையான விவரங்களை அக்டோபர் 6-ந்தேதிக்குள் தகவல் அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து நடைபெறும் செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அனைத்தும் டிசம்பர் இறுதிக்குள் அல்லது 2027-ம் ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் முடிவடையும். 2026-27-ம் ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.