கல்லூரி மாணவர்களுக்கு ரூ8000? பட்ஜெட்டில் வெளியாகப் போகும் சூப்பர் அறிவிப்பு!
ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் கல்லூரி மாணவர்களுக்கான பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. அரசுப் பள்ளிகளில் படித்துக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்குச் சேர்க்கைச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் ரூ.8,000 வழங்கும் திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலமாக ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் உயர் கல்வியைத் தடையின்றித் தொடங்குவதற்குப் பெரிய அளவில் உதவி கிடைக்கும்.
மேலும், இளங்கலை முதல் முதுகலை வரை பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதப் பிணையுமில்லாமல் ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கும் திட்டமும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவுள்ளது. மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் வகையில் வங்கியின் மூலம் எளிய முறையில் இந்த நிதி உதவியைப் பெற வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில் அரசு மேற்கொள்ளவுள்ள இந்த திட்டங்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பொருளாதாரச் சுமை காரணமாகக் உயர்கல்வியைத் தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்கு இந்தத் திட்டங்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ முழு விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்தச் சீரிய நடவடிக்கைக்குக் கல்வியாளர்களும் பெற்றோர்களும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.