2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்... 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
Jan 27, 2025, 12:30 IST
தமிழகத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் சாலையில் ஓட்டுநரின் கவனக்குறைவால் இன்று ஜனவரி 27ம் தேதி திங்கட்கிழமை காலை நெய்வாசல் கிராமம் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் காட்டுமன்னார் கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!