பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பேருந்து... 8 பேர் படுகாயம்... பகீர் சிசிடிவி காட்சிகள்!  

 

 

வங்கதேசத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மா பாலத்தில் டாக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பாலத்தின் மாவா முனையில் உள்ள சரிவுப் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும், இதில் பயணம் செய்த 8 பயணிகள் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Horrific Accident on Padma Bridge in Munshiganj, Bangladesh. Due to Race Between Two Buses

Information suggests that a horrific accident occurred when two buses, racing on a road that had turned slippery due to rain, attempted to overtake each other.

They noted that the death… pic.twitter.com/AtIQMy8L7G

— Siraj Noorani (@sirajnoorani) September 2, 2026

அதிவேகமாக வந்த அந்தப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த பாதுகாப்புச் சுவரில் மோதி கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக ஸ்ரீநகர் தீயணைப்புத்துறையைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று பேருந்துக்குள் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதோடு, விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.