ஓடும் பேருந்திலேயே டிரைவருக்கு மாரடைப்பு! பெரும் விபத்து தவிர்ப்பு!
Updated: Sep 17, 2026, 10:09 IST
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தபோது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக் குறைவு ஏற்பட்டதை உணர்ந்த பயணிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஓட்டுநர் உயிரிழந்தார்.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனை கவனித்த சக பயணிகள் உடனடியாக அவருக்கு உதவினர். ஆபத்தான சூழ்நிலையிலும் பேருந்து கட்டுப்பாட்டுடன் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதையடுத்து ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.