பேருந்து கட்டணம் உயர்வு... தமிழக அரசு 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப தனியார் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தத் தமிழக அரசுக்கு அனுமதி வழங்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்ப பேருந்துக் கட்டணத்தை உயர்த்தத் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தித் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்துத் தமிழக அரசு உரிய பரிசீலனை செய்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் எதிர்காலத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே கவலையும் ஏற்பட்டுள்ளது.